பணி நிரந்தரம் செய்யக்கோரி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

பணி நிரந்தரம் செய்யக்கோரி நேற்று பனங்குடி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Update: 2021-01-05 03:24 GMT
திட்டச்சேரி,

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்துக்கு உட்பட்ட பனங்குடியில் மத்திய அரசின் பொதுப்பணி துறை நிறுவனமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சி.பி.சி.எல்.) உள்ளது. இந்த ஆலையில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி ஆலை வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார்.இதில் துணைத் தலைவர்கள் முத்துக்குமரன், முரளிதரன், தங்கமணி உள்பட 94 ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

பணி நிரந்தரம்

கடந்த 25 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் சி.பி.ஆர் பிரிவில் பனங்குடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 94 பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.இந்த 94 ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆலை விரிவாக்க பணி காரணமாக மார்ச் 31-ந்தேதியுடன் ஒப்பந்த தொழிலாளர்களின் பணியை முடித்திட ஆலை நிர்வாகம் முடிவெடுத்தது. தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கிடவும் முன்வர வில்லை. எனவே ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் அல்லது பணியை இழக்கும் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்