கடையநல்லூரில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது
தென்காசி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது. இதனை அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்.
சங்கரன்கோவில்
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா ரூ.2,500, பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், கரும்பு ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. சங்கரன்கோவில் கக்கன் நகர் காயிதேமில்லத் புது 1-வது தெரு ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் உதவி கலெக்டர் முருகசெல்வி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அழகிரி, வட்ட வழங்கல் அலுவலர் கோகிலா, தாசில்தார் திருமலைச்செல்வி, குடிமைப்பொருள் வழங்கல் தாசில்தார் ஓசன்னா, மாவட்ட கூட்டுறவு அச்சக சங்க தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார். அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சுப்பையா பாண்டியன், ரமேஷ், வேல்முருகன், வாசுதேவன், நகர செயலாளர் ஆறுமுகம், மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் வேல்சாமி, கூட்டுறவு சங்க தலைவர் ராமநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி
தென்காசியில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டது. செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து குற்றாலம், மேலகரம், இலஞ்சி உள்ளிட்ட பகுதிகளிலும் சென்று பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கினார்.
அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட பொருளாளர் லாட சன்னியாசி என்ற சாமிநாதன், குற்றாலம் செயலாளர் கணேஷ் தாமோதரன், எம்.ஜி..ஆர். மன்ற மாவட்ட செயலாளர் காத்தவராயன், தென்காசி நகர செயலாளர் சுடலை, மேலகரம் செயலாளர் கார்த்திக் குமார், மாவட்ட பாசறை செயலாளர் சீதாராம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நெல்லை முகிலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சுரண்டை
சுரண்டை ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கி தொடங்கி ைவத்தார்.
நகர செயலாளர் வி.கே.எஸ்.சக்திவேல், மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம் பொருளாளர் சாமிநாதன் ஒன்றிய செயலாளர்கள் அமல்ராஜ், இருளப்பன், காத்தவராயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடையநல்லூர்
கடையநல்லூர் நகரசபை பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை மாவட்ட வேளாண் விற்பனைக்குழு உறுப்பினரும், அ.தி.மு.க. நகர செயலாளருமான முருகன் பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். அச்சன்புதூர், நெடுவயல், கொடிக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
செங்கோட்டை
செங்கோட்டை தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகளிலும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கும் பணி தொடங்கியது.