தி.மு.க. நடத்தும் கிராம சபை கூட்டம் தேவையற்றது ஜி.கே.வாசன் பேட்டி
தி.மு.க. நடத்தும் கிராம சபை கூட்டங்கள் தேவையற்றது என ஜி.கே. வாசன் கூறினார்.
மதுரை,
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்தி வருகின்றன. வேளாண் திருத்தச் சட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைக்கு சுமுக தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம். ஏற்கனவே தேர்தலின் போது அமைக்கப்பட்ட அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வருகிற சட்டமன்ற தேர்தலிலும் தொடரும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிகாரப்பூர்வமாக கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.
அ.தி.மு.க. கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ் மாநில காங்கிரஸ் ஏற்கிறது. தற்போதைய சூழலுக்கு ஏற்பவும் பலத்திற்கு ஏற்பவும் எங்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும். வழக்கம்போல் எங்களுக்கான சின்னத்தில் போட்டியிடுவோம். தி.மு.க. நடத்தும் கிராமசபை கூட்டங்கள் தேவையற்றது. அதை மக்கள் ஏற்கவில்லை.
ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் தேர்தல் நெருங்கும்போது நல்லவர்களுக்கு ஆதரவு அளிப்பார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உரிய நிதியை ஒதுக்கி கட்டிடப் பணிகளை விரைந்து முடிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரையில் நடைபெறும் பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநகர் மாவட்ட தலைவர் சேதுராமன், முன்னாள் எம்.பி. ராம்பாபு, மாநில செயலாளர் மைதீன்பாட்ஷா ஆகியோர் உடனிருந்தனர்.