வேலூர் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 4,304 பேர் எழுதினர் தேர்வு மையங்களை கலெக்டர் ஆய்வு
வேலூர் மாவட்டத்தில் நடந்த குரூப்-1 தேர்வை 4 ஆயிரத்து 304 பேர் எழுதினார்கள். தேர்வு மையங்களை கலெக்டர் சண்முகசுந்தரம் நேரில் ஆய்வு செய்தார்.
வேலூர்,
தமிழகத்தில் துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட 66 பதவிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல் நிலை தேர்வு நேற்று நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை 8 ஆயிரத்து 911 பேர் எழுத விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு வேலூர் முஸ்லிம் அரசுப்பள்ளி, கிருஷ்ணசாமி முதலியார் பள்ளி, முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி உள்பட மாவட்டம் முழுவதும் 31 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெற்றது. தேர்வர்கள் காலை 8 மணிமுதல் தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். அவர்கள் பலத்த சோதனைக்கு பின்னர் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் தேர்வர்களின் உடல்வெப்பநிலை தெர்மல் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. செல்போன், எலக்ட்ரானிக் கைக்கெடிகாரம், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. முககவசம் அணியாத நபர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். 9.15 மணிக்கு பின்னர் வந்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.
4,304 பேர் எழுதினர்
குரூப்-1 தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 8 ஆயிரத்து 911 பேரில் 4 ஆயிரத்து 304 பேர் மட்டும் தேர்வு எழுதினர். 4 ஆயிரத்து 607 பேர் பங்கேற்கவில்லை. வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி உள்பட பல்வேறு தேர்வு மையங்களில் நடந்த தேர்வை வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்வு அறை மற்றும் மையங்களை கண்காணிக்கும் பணியில் முதன்மை கண்காணிப்பாளர், தேர்வுஅறை கண்காணிப்பாளர்கள் என்று 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
தேர்வு மையங்களுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தேர்வு மையத்தில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஒரு அறையில் 10 பேர் மட்டும் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.