மாவட்டங்களில் கொரோனாவுக்கு இதுவரை 69 பேர் உயிரிழப்பு

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 69 பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2021-01-03 22:47 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் புதிதாக யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. மாவட்டத்தில் ஏற்கனவே 4,633 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஏற்கனவே 48 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 4,560 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவிற்கு தற்போது 25 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 196 பேருக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

பரிசோதனை

இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் 4-வது நாளாக நேற்றும் யாரும் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. ஏற்கனவே மாவட்டத்தில் 2,258 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் இருந்து இதுவரை 2,235 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், 2 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 200 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்