வாலாஜா அருகே ரேஷன் கடையை முற்றுகையிட்ட பெண்கள்

வாலாஜா அருகே ரேஷன் கடையை முற்றுகையிட்ட பெண்கள் போராட்டம் நடத்தினா்.

Update: 2021-01-03 11:19 GMT
வாலாஜா,

வாலாஜா அருகே ஒழுகூர், கூட்டுறவு ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமற்ற அரிசி வழங்கியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து அப்பகுதியை ேசர்ந்த பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்தில் வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்