தி.மு.க.வின் கவர்ச்சிகரமான திட்டங்களை நம்பி மக்கள் இனி ஏமாறமாட்டார்கள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு
தி.மு.க.வின் கவர்ச்சிகரமான திட்டஙக்ளை நம்பி மக்கள் இனி ஏமாறமாட்டார்கள் என்று விக்கிரவாண்டியலி் நடந்த அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி வடக்கு, தெற்கு ஒன்றியம் மற்றும் பேரூர் அ.தி.மு.க. செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது.
இதற்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். முத்தமிழ்ச் செல்வன் எம்.எல்.ஏ., விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர்கள் எசாலம்பன்னீர், முகுந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பூர்ண ராவ் வரவேற்றார்.
எம்.ஜி.ஆரின் வாரிசு
கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-
அ.தி.மு.க. இயக்கம் தொடங்கிய 50 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான். தற்போது நாம், முக்கியமான காலக்கட்டத்தில் இருக்கிறோம். இந்த தேர்தலில் நாம் வெற்றி பெற்றால் தான் அ.தி.மு.க. கட்டுக்கோப்பான இயக்கம் என்பதை நாம் வெளிப்படுத்த முடியும்.
ஜெயலலிதாவின் ஆட்சியை தொடர்ந்து சிறப்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார். அ.தி.மு.க.,வினர் எம்.ஜி.ஆரின் வாரிசு என்று தைரியமாக கூற முடியும். ஆனால் மற்ற யாரும் எம்.ஜி.ஆரின் வாரிசு என்று கூற முடியாது.
இடைத்தேர்தல் வெற்றி
தேர்தல் சமயங்களில் தி.மு.க., கவர்ச்சியான, பொய்யான திட்டங்களை மக்கள் மத்தியில் கூறி ஓட்டு கேட்டு வருவார்கள். ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் ஏமாந்தது போன்று இனி ஏமாற மாட்டார்கள்.
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்தாலும், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் மக்கள் ஆதரவோடு பெரிய வெற்றியை பெற்று அ.தி.மு.க., கட்சிக்கு இரண்டாவது முறையாக உயிர் அளித்துள்ளனர்.
அ.தி.மு.க. ஆட்சி உறுதி
வர இருக்கிற சட்டமன்ற தேர்தலில் தொண்டர்கள் அனைவரும் எவ்வித கருத்து வேறுபாடின்றி ஒற்றுமையுடன் தேர்தல் களத்தில் மக்களை சந்தித்து ஓட்டுகளை பெறவேண்டும். மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைய போவது உறுதி. இதை யாராலும் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய செயலாளர் வேலு, மாநில பொதுக்குழு உறுப்பினர் லட்சுமிநாராயணன், முன்னாள் சேர்மன் கலியமூர்த்தி, விக்கிரவாண்டி வடக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய பேரவைசெயலாளர் சரவணகுமார், ஒன்றிய துணைச் செயலாளர் குமார், ஒன்றிய பாசறை செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் துரைமுருகன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ரவி, ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் செங்கல்வராயன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் மணி, ஒன்றிய தலைவர் பழனி, ஒன்றிய மாணவரணி செயலாளர் திருநாவுக்கரசு, ஒன்றிய பேரவை இணைச் செயலாளர் பெரியான், ஒன்றிய தொழில்நுட்ப அணி செயலாளர் அந்துவான், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன், ஒன்றிய மகளிர் செயலாளர் பிரபா, தெற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜோதி ராஜா, மாவட்ட பிரதிநிதி பி.கே.எஸ். சுப்ரமணி ஒன்றிய விவசாய அணி இணைச் செயலாளர் நாகப்பன், ஒன்றிய பாசறை செயலாளர் சுபாகர், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் ஓம் சக்தி, மகளிர் அணி செயலாளர் சிவகாமி, மாவட்ட பிரதிநிதி ராஜாங்கம், ஒன்றிய தொழில் நுட்ப அணி செயலாளர், ராதாகிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி இணை செயலாளர் ரவி, துணைத்தலைவர் தனுசு, மற்றும் நகர கழகம் சார்பில், நகர பாசறை செயலாளர் சங்கர், துணை செயலாளர் ராஜா, பேரவைச் செயலாளர் பலராமன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சங்கர், நகரதுணை செயலாளர் கண்ணன், மாவட்ட பேரவை துணைத் தலைவர் ரமேஷ், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் ஜாகீர் உசேன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை செயலாளர் பிரகாஷ், பேரவை பொருளாளர் ரவிச்சந்திரன், நகர இளைஞரணிசெயலாளர்வாசு, இளைஞர் பாசறை செயலாளர் ஈஸ்வரன், தலைவர் பிரபு, அருண், சக்தி உட்பட அனைத்து அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்