133 ஆண்டுகள் பழமை வாய்ந்தது; ‘ராணீஸ் டவர்’ என்று அழைக்கப்படும் 130 அடி உயர தஞ்சை மணிக்கூண்டு ரூ.4 கோடியில் சீரமைப்பு
தஞ்சையில் ‘ராணீஸ் டவர்’ என்று அழைக்கப்படும் 133 ஆண்டுகள் பழமையான மணிக்கூண்டு ரூ.4 கோடியில் சீரமைக்கப்பட்டு வருகிறது. 130 அடி உயர இந்த மணிக்கூண்டின் சீரமைப்பு பணிகளை 1½ மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்,
தஞ்சை நகராட்சி, மாநகராட்சியாக 2014-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தஞ்சை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.904 கோடி செலவில் 12 விதமான பணிகள் நடந்து வருகின்றன.
மிகவும் பழமை வாய்ந்த தஞ்சை நகரம் 36.33 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது. பெரியகோவில், அரண்மனை உள்ளிட்ட பல்வேறு புராதன சின்னங்கள் இங்கு உள்ளன. தஞ்சைக்கு பெருமை சேர்க்கும் மற்றொரு சின்னம் ‘ராணீஸ் டவர்’ என்று அழைக்கப்படும் மணிக்கூண்டு.
வைர விழா நினைவாக...
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தஞ்சை ராசாமிராசுதார் மருத்துவமனையின் ஒரு பகுதி இடத்தில் 1883-ம் ஆண்டு இது கட்டப்பட்டது. இதை கட்டுவதற்கு மராட்டிய ராணி இடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
விக்டோரியா மகாராணி முடிசூடி 60 ஆண்டுகள் நிறைவு பெற்றதை நினைவுகூரும் விதமாக இந்த ராணீஸ் டவர் அருகே வைரவிழா நினைவு அலங்கார வளைவு அமைக்கப்பட்டது. இந்த அலங்கார வளைவு சாலை விரிவாக்கத்துக்காக 1995-ம் ஆண்டு உலகத்தமிழ் மாநாடு நடந்த போது அகற்றப்பட்டது.
130 அடி உயரம்
130 அடி உயரம் கொண்ட இந்த டவர் முழுவதும் செங்கல் மற்றும் சுண்ணாம்புக்கலவையால் கட்டப்பட்டுள்ளது. செங்கலின் மேல் சிமெண்டு பூச்சு இல்லாமல் மிகுந்த கலை நயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. தரைதளத்தில் இருந்து 20 அடி உயரம் வரை கட்டிடம் சதுர வடிவில் உள்ளது. இதில் 4 புறமும் வாசல்கள் உண்டு. இதன் மேல் மணிக்கூண்டின் பிரதான கட்டிடம் 60 அடிக்கு மேல் அறுகோண வடிவிலும், அதற்கு மேல் சதுரவடிவிலும் உள்ளது. அதன்மேல் உள்ள கோபுரம் தஞ்சை பெரியகோவில் விமானத்தில் உள்ளது போல் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டிடத்தில் 100 படிகளுக்கு மேல் உள்ளது.
லண்டன் கெடிகாரம்
இதில் அழகிய மரவேலைப்பாடுகளுடன் பளிங்கு கற்களுக்கு மத்தியில் கெடிகாரமும் உள்ளது. இந்த கெடிகாரம் லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்டது.
அன்றைய கால கட்டத்தில் இந்த கெடிகாரத்தில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மணி ஒலிக்கும். ஆனால் இன்று இந்த கெடிகாரம் செயல்படாமல் உள்ளது.
ராணி பூங்கா
1914-ம் ஆண்டு முதல் 1919-ம் ஆண்டு வரை நடந்த முதல் உலகப்போரில் தஞ்சையில் இருந்து 61 பேர் கலந்து கொண்டனர். அதில் 4 பேர் மரணம் அடைந்தனர் என்ற செய்தியை தாங்கிய பளிங்கு கல்லும் டவரில் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த டவரை சுற்றிலும் பூங்காவும் அமைக்கப்பட்டது. இந்த பூங்காவிற்கு ராணி பூங்கா என்று பெயர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வானொலிப்பெட்டி இருந்தது. பல வீடுகளில் வானொலி வசதி இல்லாத அந்த காலகட்டத்தில் மாலை நேரங்களில் வானொலி கேட்பதற்காக இந்த பூங்காவில் மக்கள் அதிக அளவில் கூடுவார்கள். நாளடைவில் வானொலி, கெடிகாரம் செயல்படாமல் போனது.
133 ஆண்டுகள் பழமையானது
இந்த நிலையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் ஒரு பகுதியாக 133 ஆண்டுகள் பழமையான இந்த ‘ராணீஸ் டவர்’ ரூ.4 கோடியில் சீரமைக்கப்பட உள்ளது. இதற்காக டெண்டர் விடப்பட்டு பணிகள் கடந்த 4 மாதங்களாக தொடங்கி நடந்து வருகின்றன. முதல் கட்டமாக சாக்கடை வாய்க்கால் செல்வதற்காக கான்கிரீட் போடப்பட்டு அதன் மேல் மூடியும் போடப்பட்டு உள்ளது. சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு அதில் விலங்குகள் படங்கள் மற்றும் அரண்மனைகளில் உள்ளது போல ஈட்டி வடிவிலான கம்பிகளும் பொருத்தப்பட்டு வருகின்றன.
இந்த பணிகள் ஒருபுறம் இருக்க தற்போது 130 அடி உயர மணிக்கூண்டை சுற்றிலும் பணிகள் மேற்கொள்வதற்காக சாரம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் உள்ள மரவேலைப்பாடுகள் மீண்டும் அப்படியே சீர் செய்யப்படுகிறது. கெடிகாரமும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதுடன் மீண்டும் வானொலியும் செயல்பட உள்ளது.
சாரம் அமைப்பு
டவரை சுற்றிலும் நடைபாதை அமைக்கப்படுகிறது. இதில் மழைநீர் சேகரிப்பு வசதி, பசுமையாக மாற்றும் வகையில் செடி, மரங்கள் நடுவது, சுற்றுச்சுவர் அமைப்பது, இருக்கைகள் அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இவைஅனைத்தும் பழமை மாறாமல் முன்பு எப்படி இருந்ததோ? அதே போன்று சீரமைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் இன்னும் 1½ மாதத்துக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் வகையில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.