கணவர் விடுமுறை எடுக்க மறுத்ததால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை

புத்தாண்டு கொண்டாட கணவர் விடுமுறை எடுக்க மறுத்த விரக்தியில் பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விபரீத சம்பவம் பற்றிய விவரம் வருமாறு.

Update: 2021-01-03 00:40 GMT
திருக்கனூர், 

திருக்கனூர் அருகே வம்பு பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன். தனியார் நிறுவன கார் டிரைவர். இவரது மனைவி ஜெயபிரதா (வயது 30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

மணிவண்ணன் டிரைவர் வேலை பார்த்து வந்ததால் முக்கிய தேவைகளுக்கு கூட விடுமுறை எடுக்க அவரால் இயலவில்லை. இதனால் ஜெயப்பிரதா அவ்வப்போது மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் தனது கணவரிடம் புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஒரு நாள் விடுமுறை எடுக்குமாறு ஜெயப்பிரதா வற்புறுத்தினார். அதற்கு மணிவண்ணன் நிறுவனத்தில் அழைத்தால் வேலைக்கு செல்ல நேரிடும். ஆனாலும் விடுமுறை எடுக்க முயற்சிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பின்னர் சாப்பிட்டுவிட்டு வீட்டு வராண்டாவில் மணிவண்ணன் தூங்கினார். கணவரின் சமாதானத்தை ஏற்க முடியாமல் விரக்தி அடைந்த ஜெயப்பிரதா வீட்டின் அறையில் வேட்டியால் தூக்குப்போட்டு கொண்டார். சிறிது நேரம் கழித்து அறைக்கு சென்றபோது மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு மணிவண்ணன் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மனைவியை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஜெயப்பிரதா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து மணிவண்ணன் கொடுத்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மனைவியை இழந்து கணவரும் அவரது குழந்தைகளும் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்