படப்பை அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி என்ஜினீயர் பலி

படப்பை அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியதில் என்ஜினீயர் பலியானார்.

Update: 2021-01-02 23:16 GMT
ரஞ்சித்குமார்
என்ஜினீயர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி டவுன் ஜமீன்கோட்டை தெரு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் ரஞ்சித்குமார் (வயது 26). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையில் வாடகை வீட்டில் தங்கி திருவள்ளுவர் மாவட்டம் மப்பேடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள அவரது நண்பர் ஆஷிஷ் என்பவர் வீட்டுக்கு சென்றார். புத்தாண்டு கொண்டாடி விட்டு ஸ்ரீபெரும்புதூரில் இருந்து மணிமங்கலம் வழியாக படப்பை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

சாவு
படப்பையை அடுத்த மலைப்பட்டு-சேத்துப்பட்டு கிராமத்திற்கு இடையே உள்ள காட்டுப்பகுதி அருகே வரும்போது நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இதில் ரஞ்சித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோமங்கலம் போலீசார் ரஞ்சித்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்