அரியலூர் மாவட்டத்தில் பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்

அரியலூர் மாவட்டத்தில் 2,33,739 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.2,500 மற்றும் பச்சரிசி உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது.

Update: 2021-01-02 04:36 GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க அவர்கள் பொருட்கள் வாங்க வேண்டிய தேதி, நேரத்தை குறிப்பிட்டு வீடு, வீடாக டோக்கன் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும், பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க வருகிறவர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. டோக்கன்களில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் குடும்ப அட்டையில் உள்ள நபர்களில் யார் வந்தாலும் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுச்செல்லலாம்.

பொங்கல் பரிசு தொகுப்பு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 12-ந் தேதி வரை ரேஷன் கடைகளில் வழங்கப்படவுள்ளது. விடுபட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு 13-ந்தேதி வழங்கப்படும். அரியலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான புகார்கள் இருப்பின் அரியலூர் வட்டாரத்திற்கு வட்ட வழங்கல் அலுவலரை 9445000274 என்ற செல்போன் எண்ணிலும், உடையார்பாளையம் வட்டாரத்திற்கு வட்ட வழங்கல் அலுவலரை 9445000275 என்ற எண்ணிலும், செந்துறை வட்டாரத்திற்கு வட்ட வழங்கல் அலுவலரை என்ற 9445000276 எண்ணிலும், ஆண்டிமடம் வட்டாரத்திற்கு வட்ட வழங்கல் அலுவலரை 9095950353 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இதேபோல் செந்துறை மற்றும் ஆண்டிமடம் வட்டாரத்திற்கு கூட்டுறவு சார்பதிவாளரை 9444527019 என்ற எண்ணிலும், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் வட்டாரத்திற்கு கூட்டுறவு சார்பதிவாளரை 9443180786 என்ற எண்ணிலும், தா.பழூர் வட்டாரத்திற்கு கூட்டுறவு சார்பதிவாளரை 9597870496 என்ற எண்ணிலும், திருமானூர் வட்டாரத்திற்கு கூட்டுறவு சார்பதிவாளரை 9786605942 என்ற எண்ணிலும் மற்றும் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 04329-228165 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்