மேலும் 36 பேருக்கு கொரோனா: 48 பேர் குணமடைந்தனர் - சிகிச்சை பலனின்றி ஒருவர் பலி

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 48 பேர் குணமடைந்தனர். சிகிச்சை பலனின்றி ஒருவர் இறந்தார்.

Update: 2021-01-01 17:31 GMT
திருப்பூர்,

உலகை அச்சுறுத்தி வந்த கொரோனாவால் மக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளானார்கள். தற்பொது கொரோனாவை புறமுதுகிட்டு ஓட சென்ற தடுப்பு மருந்து வந்து விட்டது. பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் விரைவில் தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தநிலையில், உருமாற்றம் பெற்ற கொரோனா இங்கிலாந்தில் வேகமாக பரவுவதாக அதிர்ச்சி தகவல் தகவல் வெளி வந்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் இங்கிலாந்து நாட்டுடனான விமான போக்குவரத்து சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் மேல்சிகிச்சைக்காக திருப்பூர் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.

தற்போது திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17ஆயிரத்து 55 ஆக உயர்ந்துள்ளது.ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 57 வயது ஆண் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன்படி மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 217 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 48 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.தற்போது, 308 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை மாவட்டம் முழுவதும் 16,530 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் செய்திகள்