சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் பிளஸ்-2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும்; அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் பிளஸ்-2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படு்ம் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
பொதுத்தேர்வு தேதி
சத்தியமங்கலத்தில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வந்தார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தொடர்பாக தேதி விவரம் அறிவித்த பின்னர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கல்வியாளர்கள் ஆகியோருடன் கலந்து ஆலோசனை நடத்தி 10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவணை வெளியிடப்படும்.
பட்டா
சத்தியமங்கலம் பகுதியில் நிபந்தனையுடன் கூடிய பட்டாக்கள் உரிமை பட்டாவாக மாற்ற வேண்டி கோரிக்கைகள் வந்து உள்ளன. இது குறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.