தென்னிலை அருகே கார் மோதி மூதாட்டி பலி 8 பேர் காயம்
நல்லிபாளையம் பிரிவு என்ற இடத்தில் கரூர்- கோவை சாலையை கடக்கும் போது திருப்பூரில் இருந்து தஞ்சாவூரை நோக்கி வந்த கார் சரஸ்வதி மீது மோதி ரோட்டின் ஓரத்தில் கவிழ்ந்தது.
க. பரமத்தி,
கரூர் மாவட்டம், தென்னிலை அருகே உள்ள நல்லிபாளையத்தை சேர்ந்தவர் நாச்சிமுத்து. இவருடைய மனைவி சரஸ்வதி (வயது 70). இவர் நேற்று காலை அவருடைய வீட்டில் இருந்து நல்லிபாளையம் பிரிவு என்ற இடத்தில் கரூர்- கோவை சாலையை கடக்கும் போது திருப்பூரில் இருந்து தஞ்சாவூரை நோக்கி வந்த கார் சரஸ்வதி மீது மோதி ரோட்டின் ஓரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சரஸ்வதி உயிரிழந்தார். மேலும் காரில் வந்த 8 பேர் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.
இதையடுத்து போலீசார் சரஸ்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காயமடைந்த 8 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தென்னிலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், காரை ஓட்டி வந்தது திருப்பூர் மாவட்டம், காந்திபுரம், ராத்திமா நகரை சேர்ந்த பீர்முகமது (32) என்பதும், காரில் 3 ஆண்கள், 2 பெண்கள், 3 குழந்தைகள் வந்ததும் தெரியவந்துள்ளது.