குடும்ப பிரச்சினை காரணமாக புதுமாப்பிள்ளை விஷம் தின்று தற்கொலை

குடும்ப பிரச்சினை காரணமாக புதுமாப்பிள்ளை விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-12-31 22:49 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தை சேர்ந்த கலியபெருமாளின் மகன் சாமிநாதன்(வயது 23). இவருக்கும், பீல்வாடி கிராமத்தை சேர்ந்த அருள்மொழிக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணமாகி அம்மாபாளையம் கிராமத்தில் வசித்து வந்தார்.

சம்பவத்தன்று சாமிநாதன் தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக எலி மருந்தை (விஷம்) தின்று மயங்கி கிடந்தார். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் சாமிநாதனை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சாவு

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாமிநாதன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இது தொடர்பாக கலியபெருமாள் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்