பெருந்துறை பகுதியில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணி; தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
பெருந்துறை பேரூராட்சியில் எடப்பாடியார் நகர் பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.
நிகழ்ச்சியில் பெருந்துறை தொகுதி தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, பணியை தொடங்கி வைத்தார். மேலும் எஸ்.எல்.என்.நகர் பகுதியில் அமைக்கப்பட்ட 6 தெரு விளக்குகள் மற்றும் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி செல்லியம்மன் நகர் பகுதியில் அமைக்கப்பட்ட 7 தெரு விளக்குகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தார்.
இதேபோல் பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி எல்லப்பாளையம் பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமிபூஜை போட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
இதில் சி.எம்.எஸ். வங்கி துணை தலைவர் ஜெகதீஸ், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் உமாமகேஸ்வரன், கூட்டுறவு சங்க தலைவர் மோகன்குமார், அ.தி.மு.க. நிர்வாகிகள் கே.எம்.பழனிச்சாமி, கைலங்கிரி குப்புசாமி, துரைராஜ், நல்லசிவம், கிருஷ்ணமூர்த்தி, டெய்லர் ரவி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.