வேதாரண்யத்தில் உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த விவசாயி கைது

வேதாரண்யத்தில் உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-12-31 02:36 GMT
வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பத்மசேகர் மற்றும் தனிப்படை போலீசார் கடினல்வயல் கிராமத்தில் ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியே ஒருவர் நாட்டு துப்பாக்கியுடன் வந்து கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

நாட்டு துப்பாக்கி பறிமுதல்

விசாரணையில் அவர், பன்னாள் கிராமத்தை சேர்ந்த விவசாயி விஸ்வநாதன்(வயது40) என்பதும், அவர் வைத்திருந்த நாட்டு துப்பாக்கிக்கு உரிமம் இ்ல்லாததும் தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த விஸ்வநாதனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்