திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு

திருச்சி மாவட்டத்துக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Update: 2020-12-31 01:38 GMT
முசிறி,

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்-அமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி 2-வது கட்டமாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் அவர் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.

இதற்காக முதல்-அமைச்சர் திருச்சி மாவட்டத்துக்கு நேற்று காலை வருகை தந்தார். தொட்டியம் அருகே திருச்சி மாவட்ட எல்லையான மேய்கல் நாய்க்கன்பட்டியில், அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி, வளர்மதி, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

உற்சாக வரவேற்பு

இதுபோல் முசிறிக்கு வருகை தந்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதை அளித்தும், செண்டை மேளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கைகாட்டியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி பொதுமக்கள் மத்தியில் முதல்-அமைச்சர் பேசினார். பின்னர் முதல்-அமைச்சருக்கு செல்வராஜ் எம்.எல்.ஏ. பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசாக வீரவாள் வழங்கினார்.

தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் என்.ஆர்.சிவபதி, ப.அண்ணாவி, முன்னாள் மாவட்ட செயலாளர் பே.சுப்ரமணியன், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் பிரின்ஸ் எம்.தங்கவேல், தா.பேட்டை அ.தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் ஆர்.ஜெயம், எஸ்.குமரவேல், கூட்டுறவு சங்க தலைவர்கள் ராஜகோபால், ராமஜெயம் மற்றும் பலர் முதல்-அமைச்சருக்கு பொன்னாடை அணிவித்தனர். முன்னதாக கலைநிகழ்ச்சியும் நடந்தது.

பூரண கும்ப மரியாதை

இதுபோல் துறையூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி, பழனிசாமி கண்ணனூரில் விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினார். முன்னதாக அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. இந்திரா காந்தி, துறையூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் அறிவழகன் விஜய், துணைத்தலைவர் பெரியசாமி, தெற்கு ஒன்றிய மகளிர் அணி இணைச்செயலாளர் ரம்யா, அரசு வக்கீல் ராஜசேகர், உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர்கள் ராம்மோகன்(வடக்கு), அழகாபுரி செல்வராஜ்(தெற்கு), பேரூர் செயலாளர்கள் ராஜேந்திரன்(பா.மேட்டூர்), ராஜாங்கம்(உப்பிலியபுரம்) உள்பட கட்சி தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

வரவேற்பு

தொட்டியம் வந்த முதல்-அமைச்சர் எடப்பாடிபழனிசாமிக்கு ஏழூர்பட்டி தங்க.தமிழ்செல்வன் மலர்கொத்து வரவேற்றார்.

ேமலும் வரவேற்பு நிகழ்ச்சியில் காட்டுப்புத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவரும், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளருமான நவஜோதி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் ராமதாஸ்(நாகையன் நல்லூர்), புனிதா விஜய சேகர் (முருங்கை) மற்றும் பலர் பங்கேற்று வரவேற்றனர்.

மேலும் செய்திகள்