நாட்டறம்பள்ளி அருகே தடுப்பு சுவர் மீது கார் மோதி சென்னை வாலிபர் பலி

நாட்டறம்பள்ளி அருகே தடுப்பு சுவர் மீது கார் மோதியதில் சென்னை வாலிபர் பலியானார்.

Update: 2020-12-30 12:03 GMT
நாட்டறம்பள்ளி, 

சென்னை மடிப்பாக்கம் குபேரன் நகர் பகுதியைச் சேர்ந்த மிசா பாண்டியன் மகன் உதயா (வயது 28). இவர் கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து காரில் சென்னைக்கு திரும்பிக்கொண்டிரு்தார். திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளிைய அடுத்த பங்களாமேடு அருகில் வந்தபோது திடீரென தடுப்பு சுவர் மீது கார் மோதி சாலையின் மறுபகுதிக்கு பாய்ந்தது. அப்போது எதிர்திசையில் கிருஷ்ணகிரி நோக்கிச்சென்ற கன்டெய்னர் லாரி மீதும் மோதியது.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த உதயா திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்