இங்கிலாந்தில் இருந்து குமரி வந்த 22 பேருக்கு பரிசோதனை உருமாறிய கொரோனா உள்ளதா? என அதிகாரிகள் கண்காணிப்பு
இங்கிலாந்தில் இருந்து குமரி திரும்பிய மேலும் 22 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களுக்கு உருமாறிய கொரோனா தொற்று உள்ளதா? என சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக வெகுவாக குறைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 150-க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலை மாறி, தற்போது நாள் ஒன்றுக்கு 20-க்குள்ளாக இருந்து வருகிறது. இதனால் குமரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது. அதேபோல் கொரோனாவுக்கு இறப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
இருப்பினும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது. மேலும் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொரோனா பரிசோதனை
இந்தநிலையில் இங்கிலாந்தில் பரவி வரும் கொரோனா உருமாற்றம் அடைந்து, வீரியம் மிக்கதாக உள்ளது. இதனால் பரவும் வேகம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இது உலகம் முழுவதிலும் உள்ள மக்களை அச்சமடையச் செய்துள்ளது.
இந்தநிலையில் இங்கிலாந்தில் இருந்து ஏராளமானோர் இந்தியாவுக்கு திரும்பி வருகிறார்கள். குமரி மாவட்டத்துக்கும் பலர் திரும்பியிருக்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன் 10 பேர் இங்கிலாந்தில் இருந்து வந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அவர்களில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்ததையடுத்து அவர்களை அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.
மேலும் 22 பேர்
இந்தநிலையில் மேலும் 22 பேர் இங்கிலாந்து நாட்டில் இருந்து தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்கள் மூலமாக குமரிக்கு வந்துள்ளனர். அவர்களுக்கும் சுகதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அவர்களுக்கும் கொரோனா இல்லை என்பது தெரிய வந்தது. இதனால் அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்த 40 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
பரிசோதனை செய்யப்பட்ட 32 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் இங்கிலாந்து நாட்டில் பரவி வரும் உருமாறிய கொரோனா தொற்று உள்ளதா? என்பது குறித்து 14 நாட்களுக்குப்பிறகு மீண்டும் பரிசோதனை செய்யப்படும் என்றும், அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கேரளா வழியாக தமிழகத்துக்கு வரக்கூடிய பாதைகளான களியக்காவிளை, பளுகல், காக்கவிளை ஆகிய சோதனைச் சாவடிகளில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதா? என்று பரிசோதனை செய்யப்படுகிறது. தினமும் 150 முதல் 200 பேர் வரை பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.