தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் ரூ.4 லட்சம் முறைகேடு செயலாளர் கைது
பேராவூரணி அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் ரூ.4 லட்சம் முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக வங்கியின் செயலாளரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த பேராவூரணி அருகே உள்ளது மாவடுக்குறிச்சி. இங்குள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் செயலாளராக பட்டுக்கோட்டையை அடுத்த பாதரசங்கோட்டை அனந்தகோபாலபுரத்தை சேர்ந்த முருகேசன் (வயது 49) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தனது பணிக்காலத்தில் 1-4-2017 முதல் 31-7-2018 வரை பொது மக்கள் வங்கியில் அடகு வைத்த நகைகளுக்குரிய பணத்தை இவர் முறைகேடாக சொந்த செலவுக்கு எடுத்து பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பட்டுக்கோட்டை கூட்டுறவு துணைப்பதிவாளர் ஜெயபாலனுக்கு தெரிய வந்தது.
செயலாளர் கைது
அவர் இது குறித்து விசாரணை நடத்தியதில் வங்கியில் முறைகேடு நடந்து இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தஞ்சை மாவட்ட வணிக குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் ஜெயபாலன் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, ஏட்டுகள் ரத்னகுமார், சுரேஷ், அசோக்ராஜன், நந்தகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து முறைகேடு செய்ததாக நேற்று காலை முருகேசனை கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட முருகேசனை போலீசார் பட்டுக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.