நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் புதிதாக 35 பேருக்கு கொரோனா

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

Update: 2020-12-30 02:25 GMT
தென்காசி,  

நெல்லை மாவட்டத்தில் நேற்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்து 262 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14 ஆயிரத்து 933 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் 118 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 211 பேர் இறந்து உள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு தொற்று உறுதியானது. இவர்களுடன் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்து 259 ஆக உயர்ந்துள்ளது. இதில் 8 ஆயிரத்து 49 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 52 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 158 பேர் இறந்து உள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 48 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 15 ஆயிரத்து 829 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டம் முழுவதும் 78 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 141 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்