ஆன்லைன் முன்பதிவு இல்லாமல் சனிபகவான் கோவிலுக்குள் மோசடியாக பக்தர்களை அனுப்பியவர்கள் கைது
திருநள்ளாறு சனிபகவானை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவில் மோசடி செய்து பக்தர்களை அனுப்பிய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
காரைக்கால்,
திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் கடந்த 27-ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில், சனிபகவானை தரிசிக்க, ஆன்லைன் முன்பதிவு அவசியம் என அறிவிக்கப்பட்டது. அடுத்து வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் இது அவசியம் எனவும் அறிவுறுத்தியது.
அதன்படி, சனிப்பெயர்ச்சி அன்று, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள், ஆன்லைன் முன்பதிவை காட்டி தரிசனம் செய்தனர். இந்தநிலையில் சில பக்தர்கள் கொண்டு வந்த ஆன்லைன் முன்பதிவு சான்று கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
ஆன்லைன் முன்பதிவில் மோசடி
இதுபற்றி போலீசார் ரகசியமாக விசாரித்தனர். அப்போது ஒரு கும்பல் ஆன்லைன் முன்பதிவு சான்று இல்லாமல் வந்த பக்தர்களிடம் ஆயிரக்கணக்கில் ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடியாக ஆன்லைன் முன்பதிவு சான்றிதழை கொடுத்து கோவிலுக்குள் அனுப்பியது தெரியவந்தது.
இது தொடர்பாக கோவில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான சிறப்பு அதிரடிப்படை போலீசார் அந்த கும்பலை சுற்றிவளைத்து பிடித்தனர்.
3 பேர் கைது
விசாரணையில் அவர்கள், திருநள்ளாறை சேர்ந்த ராஜ்குமார் (வயது 35), சங்கர் (40), சுரேஷ் (36) என்பது தெரியவந்தது. சனிப்பெயர்ச்சி அன்று கோவிலில் தரிசனம் செய்துவிட்டு, வெளியே வந்த பக்தர்களிடம், கோவில் வழிகாட்டி என அறிமுகம் செய்து கொண்டு அவர்களிடம் இருந்து ஆன்லைன் முன்பதிவு சான்றை பெற்று அதனை ஆன்லைன் முன்பதிவு செய்யாத பக்தர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு மோசடியாக தரிசனத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சனிப்பெயர்ச்சியின் மறுநாள் ஆன்லைன் முன்பதிவு இல்லையென்றாலும், இதே கும்பல், பக்தர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு, தரிசனத்திற்கு கோவில் உள்ளே அனுப்பி வைத்தது விசாரணையில் தெரியவந்தது.
ஆன்லைன் முன்பதிவில் பெயர், முகவரி போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன. புகைப்பட ஆதாரம் இல்லாததை இந்த கும்பல் பயன்படுத்தி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
இதுகுறித்து மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகா பட், போலீஸ் சூப்பிரண்டு ரகுநாயகம் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா காலத்தில், சனி பகவான் கோவிலில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு அவசியம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்து, அதற்கான பணிகளை சிறப்பாக செய்துவருகிறது. ஆனால், ஒரு சிலர் கோவில் வழிகாட்டி என கூறி, பக்தர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளனர்.
இனி வரும் காலங்களில், ஆன்லைன் முன்பதிவுடன் தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் பக்தர்களிடம் அதற்கான சான்றை திரும்பப்பெறுமாறு கோவில் நிர்வாகத்திடம் கூறியுள்ளோம். கோவில் வழிகாட்டி என யார் கூறினாலும், அவர்களை நம்பாமல், ஆன்லைன் முன்பதிவை முறைப்படி பெற்றும், கோவில் நிர்வாகம் வழிக்காட்டுதல்படியும் தரிசனம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.