எலிகள் தொல்லையால் 60 சதவீத மகசூல் இழப்பு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
எலிகள் தொல்லையால் 60 சதவீத மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதால் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா வடசேரி பகுதியை சேர்ந்த விவசாயிகள் பலர், தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெட்டியில் போட்டுவிட்டு சென்றனர். அந்த மனுவில், நாங்கள் சம்பா சாகுபடி செய்துள்ளோம். நெற்பயிர்கள் நன்றாக விளைந்துள்ளது. ஆனால் எந்த ஆண்டிலும் இல்லாத அளவுக்கு எலிகள் தொல்லை அதிகமாக இருக்கிறது. எலிகள் நெற்பயிர்களை வெட்டி வீணாக்கிவிடுகிறது.
இதனால் 60 சதவீத மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. எலிகிட்டி வைத்து அழித்தும், விஷ மருந்து தடுப்பு முறையாலும் எலிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒவ்வொரு விவசாயியும் ரூ.1000 முதல் ரூ.65 ஆயிரம் வரை செலவு செய்தும் எந்த பலனும் இல்லை. எங்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே களப்பணியாளர்களை கொண்டு வயல்களில் நேரடியாக ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
உரக்கிடங்கு
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் 12-வது வார்டு கும்பேஸ்வரன் திருமஞ்சன வீதியை சேர்ந்த மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில், 10 வார்டுகளில் இருந்து குப்பைகளை கொண்டு வந்து தரம் பிரிக்கும் மையம், உரக்கிடங்கு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இங்கு கழிவுநீர் தேங்கி நிற்பதுடன் ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சியை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுக்கள் அளித்தோம். இதனால் உரக்கிடங்கு அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் பணியை தொடங்கி இருக்கிறார்கள். எனவே யாருக்கும் கேடு வராத வகையில் மாற்று இடத்தை தேர்வு செய்து அங்கு உரக்கிடங்கு அமைப்பதுடன் குப்பைகளையும் கொட்ட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தூர்வாருதல்
தஞ்சையை அடுத்த தென்பெரம்பூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், பிரமன்பேட்டை தலைப்பு இரட்டை வாய்க்கால் மூலம் தென்பெரம்பூர், பனவெளி, வெள்ளாம்பெரம்பூர், கடமங்குடி ஆகிய 4 கிராமங்கள் பாசனவசதி பெறுகின்றன. ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக இரட்டை வாய்க்கால் தூர்வாரப்படவில்லை. இதனால் 4 கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. அள்ளூர் ஏரியில் இருந்து வரும் தண்ணீர் இரட்டை வாய்க்காலில் கலப்பதால் மழைக்காலங்களில் 400 ஏக்கர் பரப்பில் நெற்பயிர்கள் பாதிக்கப்படுகிறது. எனவே இரட்டை வாய்க்காலை தூர்வார வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.