திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம்

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனுகொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-12-29 04:28 GMT
திருவாரூர்,

நிவர் மற்றும் புெரவி புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கன மழை தொடர்ந்து பெய்தது. இந்த மழையினால் பயிர் சேதமும், ஏழை எளியோர்களின் வீடுகள் சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். எனவே தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி தாசில்தார் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.

மனு கொடுக்கும் போராட்டம்

அதன்படி நேற்று திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு நகர செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.

இதில் செயற்குழு உறுப்பினர் பழனிவேல், மாவட்டக்குழு உறுப்பினர் ராமசாமி, ஒன்றிய செயலாளர் இடும்பையன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் கோரிக்கை மனுக்களை தாசில்தார் நக்கீரனிடம் மனு அளித்தனர்.

மேலும் செய்திகள்