மாவட்டத்தில் 33 மையங்களில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு 3,245 பேர் எழுதினார்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 10-ம் வகுப்பு படிக்க கூடிய மாணவ, மாணவிகளுக்கான தேசிய திறனாய்வு தேர்வு நேற்று நடந்தது. 33 மையங்களில் நடந்த இந்த தேர்வை 3,245 பேர் எழுதினார்கள்.

Update: 2020-12-28 17:08 GMT
கிருஷ்ணகிரி,

10-ம் வகுப்பு படிக்க கூடிய மாணவ, மாணவிகளுக்கான தேசிய திறனாய்வு தேர்வு நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, மத்தூர், ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய இடங்களில் இந்த தேர்வு நடந்தது.

மத்தூரில் 13 மையங்களிலும், கிருஷ்ணகிரியில் 9 மையங்களிலும், ஓசூரில் 7 மையங்களிலும், தேன்கனிக்கோட்டையில் 4 மையங்களிலும் என மொத்தம் 33 மையங்களில் இந்த தேர்வு நடந்தது. இந்த தேர்வை எழுத மொத்தம் 3 ஆயிரத்து 471 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 3 ஆயிரத்து 245 பேர் தேர்வை எழுதினார்கள். 226 பேர் தேர்வு எழுதவில்லை.

காலை 9 மணி முதல் 11 மணி வரையில் கணித திறனறி தேர்வும், காலை 11.30 மணி முதல் 1.30 மணி வரையில் பாட திறனறி தேர்வும் நடந்தது. கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் இந்த தேர்வு நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அஞ்சூர், ஜெகதேவி, மத்தூர் பள்ளிகளில் நடந்த தேர்வை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி பார்வையிட்டார்.

மேலும் செய்திகள்