தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம்
தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் சுப்ராயலு தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் செல்வநாயகம், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் கென்னடி, லியாகத்அலி, காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அ.தி.மு.க. அரசின் குறைகள் மற்றும் ஊழல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் நகர துணை செயலாளர் அபுபக்கர், நிர்வாகிகள் கொளஞ்சி, இளங்கோவன், சித்தார்த்தன், ராஜேந்திரன், கேசவன், சௌந்தரராஜன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பஞ்சமாதேவி கிராமத்தில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார்.
அவைத்தலைவர் அசோக்குமார், துணை செயலாளர்கள் ராஜசேகர், சுந்தரமூர்த்தி, பொருளாளர் முரளி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஏழுமலை, மாணவர் அணி அமைப்பாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் மாநில மருத்துவ அணி இணை செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான டாக்டர் லட்சுமணன் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை பற்றி மக்களுக்கு விளக்கி கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதிகள் சரவணன், ராஜேந்திரன், முருகன், மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் பிரியங்கா, தொண்டரணி நிர்வாகிகள் ரமேஷ், செந்தில்குமார், சிறுபான்மை அணி அமைப்பாளர் கமால்பாஷா, கிளை செயலாளர்கள் முருகன், பாலாஜி, தட்சிணாமூர்த்தி, பாஸ்கர், மணிபாலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.