பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் தேசிய திறனாய்வு தேர்வை 2,071 மாணவ-மாணவிகள் எழுதினர்
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் தேசிய திறனாய்வு தேர்வை 2,071 மாணவ-மாணவிகள் எழுதினர். 96 பேர் தோ்வு எழுத வரவில்லை.
பெரம்பலூர்,
தமிழகத்தில் தற்போது எஸ்.எஸ்.எல்.சி. படித்து வரும் மாணவ-மாணவிகளில், 9-ம் வகுப்பில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்தவர்கள், அதனை தகுதியாக கொண்டு மத்திய அரசின் தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகளின் வங்கி கணக்கில் தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகையாக மத்திய அரசு சார்பில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படவுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த தேர்வினை எழுத 338 மாணவர்களும், 705 மாணவிகளும் என மொத்தம் 1, 043 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் 1,124 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்தனர்.
மனத்திறன்-படிப்பறிவு
இந்த தேர்வானது பெரம்பலூர் மாவட்டத்தில் 11 மையங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் 13 மையங்களிலும் நேற்று நடந்தது. காலை 9 மணிக்கு தொடங்கி 11 மணி வரை மனத்திறன் தேர்வும், அதன் பின்னர் 11.30 மணியில் இருந்து மதியம் 1.30 மணி வரை படிப்பறிவு தேர்வும் நடந்தது. மாணவர்களின் திறனை கண்டறியும் பொருட்டு 9-ம் வகுப்பு வரையிலான கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் இருந்தும், பொது அறிவு சம்பந்தமான கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தது.
ஒரே வார்த்தையில் விடையளித்து அதனை ஓ.எம்.ஆர். விடைத்தாளில் ‘ஷேடு’ செய்யும் வகையில் தேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. கொரோனா அச்சுறுத்தலால் மாணவ-மாணவிகள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் தோ்வு எழுதினா்.
ஆய்வு
தேர்வு மையங்களை அரியலூர் மாவட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரி தியாகராஜனும், பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பூர் கல்வி மாவட்ட அலுவலர் குழந்தைராஜனும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த தேசிய திறனாய்வு தேர்வில் 314 மாணவர்களும், 679 மாணவிகளும் என மொத்தம் 993 பேர் பங்கேற்று தேர்வினை ஆர்வத்துடன் எழுதினர். 24 மாணவர்களும், 26 மாணவிகளும் என மொத்தம் 50 பேர் தேர்வு எழுத வரவில்லை. அரியலூர் மாவட்டத்தில் 1,078 பேர் தேர்வு எழுதினர். 46 பேர் தேர்வு எழுத வரவில்லை.