தியாகதுருகம், சின்னசேலத்தில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு
தியாகதுருகம், சின்னசேலத்தில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர்.நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகத்தில் ஒன்றிய, நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர்.நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதற்கு நகர செயலாளர் ஷியாம்சுந்தர் தலைமை தாங்கினார். தியாகதுருகம் மேற்கு ஒன்றிய செயலாளர் அய்யப்பா, கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்பாஷா, ஒன்றிய அவைத்தலைவர் வைத்திலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கடைவீதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று பஸ் நிலையத்தில் எம்.ஜி.ஆர். உருவபபடத்தக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து காந்திநகரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஒன்றிய துணை செயலாளர் ஜெயச்சந்திரன், நகர அவைத்தலைவர் அய்யம்பெருமாள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர்கள் குமரவேல், சாமிதுரை, ராஜேந்திரன், குமாரசாமி, தமிழரசிகுமரவேல், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் சிறுவல் மணிவண்ணன், எம்.ஜி.ஆர்.மன்ற இளைஞரணி துணை செயலாளர் ரமேஷ், விவசாய அணி துணை செயலாளர் பாலசுப்பிரமணியன், பிரதிநிதி குமார், நகர நிர்வாகி வேல் நம்பி, ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் செல்வராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் சிவா, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் பாலகிருஷ்ணன், நீலாவதி கதிர்வேல், சுமதி பாலகிருஷ்ணன், வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள் இயக்குனர் மணிவண்ணன், ஊராட்சிமன்ற முன்னாள் துணைத் தலைவர் சந்தோஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சின்னசேலம் கிழக்கு ஒன்றியம், மேற்கு ஒன்றியம், மற்றும் சின்ன சேலம் நகர அ.தி.மு.க. சார்பில் சின்னசேலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் அய்யம்பெருமாள், நகர செயலாளர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் சின்ன சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று பழைய பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் ராகேஷ், ஒன்றிய முன்னாள் செயலாளர் சீனிவாசன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் லட்சுமி சேகர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அ.ம.மு.க. மாநில அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திருக்கோவிலூர் தொழிலதிபர் எஸ்.கார்த்திகேயன் கட்சி நிர்வாகிகளுடன் திருக்கோவிலூர் பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. சிவராஜ் ஆகியோரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தார். இதற்கு கள்ளக்குறிச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர்கள் கே.ஜி.பி. ராஜாமணி, முன்னாள் எம்.எல்.ஏ. கோமுகிமணியன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் கழுமரம் செந்தில்குமரன், காட்டுப்பையூர் சந்திரசேகரன், முருகதாஸ், அய்யனார், குமார் கேசவன், ராஜேந்திரன், சாமிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் வக்கீல் சேஷ லட்சுமி குமார், திருக்கோவிலூர் தொழிலதிபர் எஸ் பிரபு, முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, அலமேலு, சின்னதுரை, நகர செயலாளர்கள் இளவரசன், சோலையப்பன், தேசிங்கு, அன்பு முருகன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வக்கீல் ரஜினிகாந்த், தொழில்நுட்பபிரிவு செயலாளர் சிவகுமார், மாவட்ட முன்னாள் கவுன்சிலர் அழகேசன், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் ரவிக்குமார், மோகன், ஜெகன்நாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.