திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி பகுதியில் எம்.ஜி.ஆர். நினைவுதினம் அனுசரிப்பு
திருக்கோவிலூர் மற்றும் கள்ளக்குறிச்சி பகுதியில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி திருக்கோவிலூர் அருகே உள்ள மேமலூர் கிராமத்தில் நடைபெற்றது. இதில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.பி.பழனி தலைமையில் எம்.ஜி.ஆர். உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட முன்னாள் ஊராட்சி குழு உறுப்பினர் மேமலூர் போலீஸ் என்.அருணகிரி, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி செல்வம், ஒன்றிய முன்னாள் கவுன்சிலர்கள் அசோக், வெற்றி, வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
திருக்கோவிலூர் நகர அ.தி.மு.க.சார்பில் நகர செயலாளர் கே.சுப்பு என்கின்ற சுப்பிரமணியன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஊர்வலமாக சென்று பஸ் நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அன்னதானம் வழங்கினர்.
இதில் அவைத்தலைவர் ஜெயபாலன், முன்னாள் கவுன்சிலர்கள் ரகோத்தமன், பாலாஜி, நகர பொருளாளர் ஷபி, பேரவை செயலாளர் மணி, தொகுதி முன்னாள் செயலாளர் லட்சாதிபதி, ராஜேந்திரன், வக்கீல்கள் உமாசங்கர், அதன், ரவி, வார்டு செயலாளர்கள் சின்னத்தம்பி, புருஷோத்தமன், கண்ணன், வீரமணி திருமலை, சங்கர், அன்பரசு, அசோகன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் நடராஜன், பழனி, மாவட்ட மாணவரணி துணை செயலாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருக்கோவிலூர் மத்திய ஒன்றியத்தின் சார்பில் துரிஞ்சிப்பட்டு, பூமாரி, மண்டபம், ஆகிய ஊர்களில் நடந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மத்திய ஒன்றிய செயலாளர் சேகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திருக்கோவிலூர் ஒன்றிய விவசாய அணி செயலாளர் துரிஞ்சிப்பட்டு முருகன், நிர்வாகிகள் மணிவண்ணன், திருக்கோவிலூர் முன்னாள் தலைவர்கள் ஆவியூர் தேசிங்குராஜா, திருப்பாலப்பந்தல் சங்கர், செந்தில், செல்வராஜ் சுந்தரமூர்த்தி, பூமாரி குப்பன், பாடியந்தல் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முகையூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பில்ராம்பட்டு கிராமத்தில் எம்.ஜி.ஆர். நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. இதற்கு ஒன்றிய செயலாளர் தனபால்ராஜ் தலைமை தாங்கி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதேபோல் கண்டாச்சிபுரம், மடவிளாகம், அங்குராய நத்தம் சித்தாத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் எம்.ஜி.ஆர். சிலை மற்றும் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் சிவலிங்கம், சீனிவாசன், முருகதாஸ், தங்கராஜ, வெங்கடாஜலபதி, சிவசக்தி, ஏழுமலை, முருகதாஸ், கார்த்தி, மதியழகன், பிரவீன், ஜெயகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு ஆலத்தூரில் நடைபெற்றது. இதற்கு கூட்டுறவு சர்க்கரை இணைய தலைவரும், கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய செயலாளருமான ராஜசேகர் தலைமை தாங்கி அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கும், ஜெயலலிதா உருவபடத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கி தலைவர் கல்பனா ஹரிஹரன், மாவட்ட பிரதிநிதி சகாதேவன், கிளை செயலாளர் ராமு, கோவிந்தராஜ், ஒன்றிய இளைஞரணி துணை தலைவர் சக்திவேல், பால் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் கோவிந்தன் மற்றும் நிர்வாகிகள் ஏழுமலை, பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.