தஞ்சையில் பேரணி-பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்க தாமதம்: மாநகராட்சி அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
தஞ்சையில் பேரணி-பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்க தாமதமாவதை கண்டித்து தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
மத்தியஅரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும், மின்சார சட்ட மசோதாவையும் திரும்ப பெறக் கோரி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், இந்த சட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் அ.தி.மு.க. அரசு தனது முடிவை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் வருகிற 29-ந் தேதி தஞ்சையில் பேரணி-பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
தஞ்சை திலகர் திடலில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கு அனுமதி பெறுவதற்காக கடந்த 21-ந் தேதி விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவினர் மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தனர். ஆனால் அனுமதி வழங்காமல் தாமதப்படுத்தினர். இந்தநிலையில் திலகர் திடலில் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கும் வகையில் பணம் கட்டுவதற்காக போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவினர் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்திற்கு நேற்றுகாலை வந்தனர்.
காத்திருப்பு போராட்டம்
ஆனால் பணம் கட்டுவதற்கான படிவத்தை கொடுக்க மாநகராட்சி நிர்வாகம் மறுத்துவிட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமி.நடராஜன், மாவட்ட செயலாளர்கள் கண்ணன், பாலசுந்தரம், மாவட்ட தலைவர்கள் செந்தில்குமார், வீரமோகன், சமவெளி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பழனிராசன், மக்கள் அதிகாரம் அமைப்பு பொருளாளர் காளியப்பன், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார், மாதர் சங்க மாவட்ட செயலாளர்கள் தமிழ்ச்செல்வி, விஜயலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதை அறிந்த மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேரணி-பொதுக்கூட்டத்திற்கு அனுமதி தரும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என்றனர். இதையடுத்து நிர்வாகிகள் சிலர், மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்
பேச்சுவார்த்தை
பின்னர் வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி, தாசில்தார் வெங்கடேஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிராஜன், மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களை அழைக்காமல் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்களை கொண்டு கூட்டம் நடத்தினால் அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதை ஏற்க மறுத்து கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கூட்டம் நடத்தப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் பேசிவிட்டு முடிவை தெரிவிப்பதாக அதிகாரிகள் கூறியதால் மாலை 4 மணிக்கு போராட்டத்தை முடித்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.