மராட்டிய மாநிலத்தில் இருந்து 2-ம் கட்டமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருச்சி வந்தன
மராட்டிய மாநிலத்தில் இருந்து இரண்டாம் கட்டமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருச்சி வந்தன.
திருச்சி,
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்றத்தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
மேலும் மாராட்டிய மாநிலத்தில் இருந்து கூடுதலாக திருச்சி மாவட்டத்திற்கு கடந்த 22-ந் தேதி மின்னணு வாகக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. இந்தநிலையில் 2-வது கட்டமாக நேற்று மராட்டிய மாநிலத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் விவிபேட் எந்திரங்கள் ஆகியவை பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டன.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
இவை அனைத்தும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டு பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. இதனை ஆய்வுசெய்த கலெக்டர் எஸ்.சிவராசு நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த வாரம் மராட்டிய மாநிலத்தில் இருந்து 570 கட்டுப்பாட்டு எந்திரங்களும் 230 விவிபேட் எந்திரங்களும் வந்தது. தற்போது 1,220 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 2,920 கட்டுப்பாட்டு கருவிகளும், 4,330 விவிபேட் எந்திரங்களும் வந்துள்ளன.
40 சதவீதம் கூடுதல்
மொத்தம் 5,686 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 4,341 கட்டுப்பாட்டு கருவிகளும், 4,686 விவிபேட் எந்திரங்களும் வந்துள்ளன. மொத்தம் 3 ஆயிரத்து 341 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான எந்திரங்கள் போதுமானதாக வந்துள்ளன.
வாக்குப்பதிவு எந்திரங்கள் சரி பார்க்கும் பணி முடிந்ததும், எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு விடும். நமக்கு எவ்வளவு எந்திரங்கள் தேவையோ, அதை விட கூடுதலாக 40 சதவீதம் எந்திரங்கள் வந்து இருக்கின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.