கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானான்.
சென்னை,
திருவள்ளூரை அடுத்த தண்ணீர்குளம் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவருடைய மகன் சந்தோஷ் (வயது 12). இவர், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று மாலை சந்தோஷ், அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களுடன் கிருஷ்ணா கால்வாயில் குளிக்க சென்றார். அப்போது சந்தோஷ், திடீரென நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதை கண்ட சக நண்பர்கள் கூச்சலிட்டனர். அப்போது கரையிலிருந்த அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கால்வாய்க்குள் குதித்து சந்தோசை மீட்டனர்.
பின்னர் சிகிச்சைக்காக அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சந்தோஷ், ஏற்கனவே நீரில் மூழ்கி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.