சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மகிளா காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்

சமையல் கியாஸ் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து கடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் மகிளா காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2020-12-25 06:06 GMT
கடலூர்,

சமையல் கியாஸ் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து கடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் மகிளா காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட மகளிரணி தலைவர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் வக்கீல் கலையரசன், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் ராமதுரைசாமி, மீனவரணி தலைவர் கடல் கார்த்திகேயன், ஓ.பி.சி. மாவட்ட தலைவர் ராமராஜ், மாவட்ட செய்தி தொடர்பாளர் உமாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வக்கீல் சந்திரசேகரன் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மத்திய அரசுக்கு எதிராக கோ‌‌ஷங்களை எழுப்பினர். இதில் நிர்வாகிகள் அன்பழகன், ராதாகிரு‌‌ஷ்ணன், தாமோதரன், ஆறுமுகம், மங்கலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்