திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் குறைவான பக்தர்களுடன் சனிப்பெயர்ச்சி விழா நடத்தப்படும் கவர்னர் கிரண்பெடி பேட்டி
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ள சனிப்பெயர்ச்சி விழா, கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கைகளுடன், குறைவான பக்தர்களுடன் நடத்தப்படும் என புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி கூறினார்.
பொறையாறு,
கொரோனா காரணமாக திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழாவை நடத்தக் கூடாது என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விழாவை நடத்த அனுமதி அளித்த சென்னை ஐகோர்ட்டு இது தொடர்பாக கவர்னர், அதிகாரிகள் மற்றும் வழக்கு தொடர்ந்தவர் ஆகியோர் கலந்து பேசி வழிகாட்டு நெறிமுறைகளை முடிவு செய்ய உத்தரவிட்டது.
அதன்படி நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி, புதுவை அரசு அறநிலையத்துறை செயலர் சுந்தரேசன், காரைக்கால் கலெக்டர் அர்ஜூன் சர்மா, திருநள்ளார் கோவில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ் மற்றும் மனுதாரர் நாதன் ஆகியோர் அடங்கிய ஐந்து பேர் குழு ஆலோசனை நடத்தியது.
ஆலோசனைக்கு பிறகு கவர்னர் கிரண்பெடி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒருமித்த முடிவு
ஐகோர்ட்டு அறிவுறுத்தல்படி நடந்த ஆலோசனையின்படி முன்னரே தீர்மானித்த பாதுகாப்பு விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்து கூடுதல் பாதுகாப்பு அம்சத்துடனும் பல்வேறு கொரோனா கட்டுப்பாடு அம்சங்களுடனும், குறைந்த அளவில் கோவிலுக்கு பக்தர்களை அனுமதித்து சனிப்பெயர்ச்சி விழாவை மிகுந்த பாதுகாப்புடன் கொண்டாட ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வரும் பக்தர்களை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை காரைக்கால் கலெக்டர் விரைவில் வெளியிடுவார். சனிப்பெயர்ச்சி விழா தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.