அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு
அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
கரூர்,
தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க.வின் நிறுவன தலைவருமான எம்.ஜி.ஆரின் 33-வது ஆண்டு நினைவு தினம் கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி வெங்கமேட்டில் உள்ள எம்.ஜி.ஆர். உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் தலைமையில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளானோர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தினர். அப்போது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வாழ்க... கோஷத்தை அ.தி.மு.க.வினர் எழுப்பினர். இதில், கீதா மணிவண்ணன் எம்.எல்.ஏ., ஆவின் தலைவர் எம்.எஸ்.மணி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கீதா எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை
இதேபோல் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி சார்பில் காந்திகிராமத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., கீதா மணிவண்ணன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர் ஆர்.மணிவண்ணன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தோகைமலை
தோகைமலை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பாக தோகைமலை பஸ் நிலைய பகுதியில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு, ஒன்றிய செயலாளர் ரெங்கசாமி தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில், ஒன்றிய துணைச் செயலாளர் துரைகவுண்டர், தோகைமலை ஒன்றிய பெருந்தலைவர் லதாரெங்கசாமி, ஒன்றிய துணை பெருந்தலைவர் பாப்பாத்தி சின்னவழியான், கல்லடை ஒன்றிய கவுன்சிலர் வளர்மதிஆசைகண்ணு, மாவட்ட கவுன்சிலர் பழனிச்சாமி, மாணவரணி செயலாளர் வெங்கடாசலம் (எ) மணி, கவிதா ஸ்வீட் ஸ்டால் வெங்கடேசன், பொருந்தலூர் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காவல்காரன்பட்டியில் நடந்த எம்.ஜி.ஆர். நினைவு தின நிகழ்ச்சியில், மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜயன் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.