மனை பிரிவுக்கு அரசு நில மதிப்பீடு செய்ய ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 அரசு அலுவலர்கள் கைது

காஞ்சீபுரத்தில் மனை பிரிவுக்கு அரசு நில மதிப்பீடு செய்ய ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 அரசு அலுவலர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-12-24 20:36 GMT
காஞ்சீபுரம், 

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் தனது வீட்டு மனைபிரிவு நிலத்திற்கு பத்திரப்பதிவு செய்வதற்காக அரசு நில மதிப்பீடு செய்ய காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிக்கை பகுதியில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை அணுகி உள்ளார். மனை பிரிவுக்கு அரசு நில மதிப்பீடு நிர்ணயம் செய்து வழங்குவதற்காக மாவட்ட பதிவாளரின் உதவியாளர் சதீஷ்குமார், அலுவலக உதவியாளர் பாலாஜி ஆகியோர் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர்.

இதுகுறித்து திருநாவுக்கரசு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழங்கிய ரசாயனம் தடவிய ரூபாயை திருநாவுக்கரசு சதீஷ்குமார், பாலாஜியிடம் வழங்கினார்.

அப்போது காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையில் மறைந்திருந்த போலீசார் கையும் களவுமாக சதீஷ்குமார், பாலாஜி இருவரையும் கைது செய்தனர். அவர்கள் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்