புனேயில், போலீஸ்காரரின் மகள் காரில் கடத்தி கற்பழிப்பு - ஆண் நண்பர் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு

புனேயில் போலீஸ்காரரின் மகளை கடத்தி கற்பழித்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-12-24 19:14 GMT
புனே,

புனே வட்காவ் பகுதியில் 21 வயது இளம்பெண் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது தந்தை போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 21-ந்தேதி இரவு இளம்பெண் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக இளம்பெண்ணின் ஆண் நண்பர் சாகர் மோகன் என்பவர் காரில் வந்தார். அவர் இளம்பெண்ணை காரில் ஏறும்படி தெரிவித்தார். இதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்தார்.

இதனால் சாகர் மோகன் காரில் ஏறாவிட்டால் தான் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் பயந்துபோன அப்பெண் அவரது காரில் ஏறினார். அப்போது காரில் சாகர் மோகனின் நண்பர்கள் 2 பேர் உடன் இருந்தனர்.

இதையடுத்து சிறிது தூரம் கார் சென்ற பின்னர், 3 பேரும் சேர்ந்து இளம்பெண்ணின் வாயை பொத்தி கை, கால்களை கயிற்றால் கட்டினர். பின்னர் அகமது நகர் பகுதிக்கு கடத்தி சென்றனர். அங்கு வைத்து 3 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்தனர். பின்னர் அப்பெண்ணை புனேயில் உள்ள அவரது வீட்டின் அருகே விட்டு விட்டு தப்பிச்சென்றனர்.

இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறி அழுது உள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில் போலீசார் இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்த 3 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்