போலீஸ் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை - காரணம் என்ன? போலீஸ் விசாரணை

போலீஸ் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-12-24 18:58 GMT
வசாய்,

பால்கர் மாவட்டம் நாலாச்சோப்ரா துலின்ஞ் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தவர் போயே (வயது40). இவர் இரவு நேர ஊரடங்கினால் இரவு பணியில் இருந்து வந்து உள்ளார். இந்தநிலையில் நேற்று காலை போலீஸ் நிலையம் வந்த அவர், அங்குள்ள அறைக்கு சென்றார். பின்னர் அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தனது தலையில் சுட்டு உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார்.

இதற்கிடையே துப்பாக்கி சுடும் சத்தம்கேட்டு அங்கிருந்த மற்ற போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு ரத்த வெள்ளத்தில் போயே உயிரிழந்தது கிடந்தார்.

இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிேசாதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்