தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் 6 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் கொள்கலன் அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.48 லட்சம் செலவில் 6 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் கொள்கலனை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று திறந்து வைத்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் வசதிக்காக ஏற்கனவே 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் கொள்கலன் உள்ளது. இந்த நிலையில் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் கூடுதல் ஆக்சிஜன் கொள்கலன் தேவைப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு ரூ.48 லட்சம் மதிப்பில் கூடுதலாக 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய திரவ ஆக்சிஜன் கொள்கலன் அமைக்கப்பட்டு உள்ளது.
திறப்பு விழா
இதன் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர்செந்தில் ராஜ் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி.சண்முகநாதன், சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, புதிய திரவ ஆக்சிஜன் கொள்கலனை திறந்து வைத்தார்.
மேலும், தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளின் ஆக்சிஜன் அளவு, இருதயத்துடிப்பு, மூச்சுவிடும் தன்மை, இ.சி.ஜி மற்றும் இருதய இயக்கத்தையும், அதன் தன்மையையும் மருத்துவ அறையில் இருந்தே 24 மணி நேரமும் கண்காணிக்கும் நவீன தொலை கண்காணிப்பு கருவி நிறுவப்பட்டு உள்ளது.
இதனையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆஸ்பத்திரி டீன் சி.ரேவதி பாலன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.