அம்மா இருசக்கர வாகனத்துக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கலெக்டர் அரவிந்த் தகவல்
அம்மா இருசக்கர வாகனத்துக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நேற்று மானியம் வழங்கப்பட்டுள்ளது. உழைக்கும் மகளிரின் அன்றாட செயல்பாட்டை இலகுவாக்கும் நோக்கத்துடன் மகளிர் பணியிடங்களுக்கும், பிறவேலைகளுக்கும் எளிதில் செல்லும் வகையில் அவர்களின் பணிகளை சிரமமின்றி செய்வதற்கு ஏதுவாக இருசக்கர வாகனம் வாங்குவதற்காக மானியம் வழங்க அம்மா இருசக்கர வாகனத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி இத்திட்டத்தின்கீழ் குமரி மாவட்டத்தில் 2020-2021-ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இம்மாதம் 31-ந் தேதி வரை ஏற்கனவே கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், குமரி மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டினை நிறைவு செய்வதற்கு தகுதி வாய்ந்த உழைக்கும் மகளிரிடமிருந்து போதுமான அளவில் விண்ணப்பங்கள் பெறப்படவில்லை. மேலும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் நிலையில் இதற்கான விண்ணப்பங்கள் மிக மிக குறைந்த அளவிலேயே பெறப்பட்டுள்ளது.
கால அவகாசம் நீட்டிப்பு
ஆகவே, இந்த மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள குறியீட்டினை விரைந்து நிறைவு செய்வதற்கு ஏதுவாகவும், தகுதி வாய்ந்த மகளிர் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்திலும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க 10-1-2021 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, குமரி மாவட்டத்தின் ஊரக மற்றும் நகர்புற பகுதிகளைச் ேசர்ந்த தகுதி வாய்ந்த உழைக்கும் மகளிர் இத்திட்டத்தின்கீழ் உடனடியாக விண்ணப்பித்து இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.