அறந்தாங்கி அருகே வாலிபரை வெட்டியவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
அறந்தாங்கி அருகே வாலிபரை வெட்டியவர்களை கைது செய்யக்கோரி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி,
அறந்தாங்கியை அடுத்த கருங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பிலியன். இவரது மகன் அய்யனார் (வயது 20). விவசாயியான இவர் நேற்று முன்தினம் கருங்காடு சாய்பாபா கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, காரில் வந்த ஒரு கும்பல் அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த அய்யனார் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நாகுடி போலீசார் வழக்கு ப்பதிவு செய்து பாண்டிபத்திரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரை கைது செய்தனர்.
சாலை மறியல்
இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய கோரி அப்பகுதி பொதுமக்கள் நேற்று நாகுடி கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயசீலன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.