நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் 40 பேருக்கு கொரோனா

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் நேற்று 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2020-12-23 03:27 GMT
தென்காசி,

நெல்லை மாவட்டத்தில் நேற்று 26 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேவேளையில் 22 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்கள்.

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் நெல்லை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்றுடன் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 182ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 14 ஆயிரத்து 829 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 142 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 211 பேர் இறந்துள்ளனர்.

விடுதி மாணவர்

இந்த நிலையில் நேற்று முன்தினம் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் படிக்கும் மாணவர் ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. இதையொட்டி அந்த விடுதியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த மாணவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து விடுதி முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தென்காசி- தூத்துக்குடி

தென்காசி மாவட்டத்தில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 8 ஆயிரத்து 211 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை முடிந்து 8 ஆயிரத்து 20 பேர் வீடு திரும்பி உள்ளனர். 35 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 156 பேர் இறந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 977 ஆக உள்ளது. இதில் 15 ஆயிரத்து 747 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 89 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 141 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்