காரையூர் பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி
காரையூர் பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
காரையூர்,
பொங்கல் பண்டிகையொட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடத்தப்படும். தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு உள்ளிட்டவைகள் அதிக அளவில் நடத்தப்படும்.
இதையொட்டி காரையூர் பகுதியில் காளைகளுக்கு அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் இளைஞர்கள் பல்வேறு பயிற்சிகளை அளிக்க தொடங்கிவிட்டனர். இதில் இடையாத்தூர், சூரப்பட்டி, நல்லூர், அரசமலை, முள்ளிப்பட்டி, கீழத்தானியம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள காளைகளுக்கு தீவிரமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
நீச்சல் பயிற்சி
காளைகளுக்கு பாய்ச்சல் பயிற்சி, நீச்சல் பயிற்சி, மணலில் கொம்புகளால் குத்தி கிளர்வது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் காளையர்களும் காளைகளை பிடிக்க பயிற்சி பெற்று வருகின்றனர்.
இது குறித்து ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வரும் இடையாத்தூர் துரை கூறுகையில், பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டதால் காளைகளுக்கு தீவிர பயிற்சி அளித்து வருகிறோம். ஜல்லிக்கட்டு திடலில் நின்று விளையாடவும், பிடிக்க வரும் வீரர்களிடம் இருந்து தப்பிக்க சிறப்பு பயிற்சி அளிக்கிறோம். மேலும் காளைகளுக்கு சத்தான உணவு வழங்கி வருகிறோம் என்றார்.