தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் இணைந்து ஜெயங்கொண்டம் போக்குவரத்து கழக கிளையின் வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டம்,
தமிழக அரசு 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும், போக்குவரத்து கழகத்தை பாதுகாத்திட வரவுக்கும், செலவுக்கும் இடைப்பட்ட நிதியை வழங்க வேண்டும், 100 சதவீதம் பஸ்களை இயக்க வேண்டும், பணி கிடைக்காமல் திரும்புகின்ற தொழிலாளர்களுக்கு வருகைப்பதிவு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் இணைந்து ஜெயங்கொண்டம் போக்குவரத்து கழக கிளையின் வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கங்களின் அமைப்பு செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். தொ.மு.ச. கிளை தலைவர் கொளஞ்சி முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. சங்க நிர்வாகிகள் நீலமேகம், வீரப்பன், வீரமணி மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியன், மாறன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் அம்பேத்கர் தொழிற்சங்க நிர்வாகி அசோக்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.