தாய்மார்கள் ஒன்றிணைந்து அ.தி.மு.க. ஆட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும் தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் பொன்முடி எம்.எல்.ஏ. பேச்சு
வருகிற சட்டமன்ற தேர்தலில் தாய்மார்கள் ஒன்றிணைந்து அ.தி.மு.க. ஆட்சிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று தி.மு.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டத்தில் பொன்முடி எம்.எல்.ஏ. பேசினார்.
விழுப்புரம்,
ஏழை, எளிய தாய்மார்களை நிலைகுலைய வைத்துள்ள சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்தும், இந்த விலை உயர்வை உடனடியாக திரும்ப பெறக்கோரியும் தமிழகம் முழுவதும் நேற்று தி.மு.க. மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்த வகையில் விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டரணி சார்பில் நேற்று மாலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் மைதிலி ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் உமாமூர்த்தி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் செல்வி, துணை அமைப்பாளர்கள் தேன்மொழி, ஆனந்தி, ஜெயலட்சுமி, அம்பிகா, சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் துணை பொதுச்செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ., விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் புகழேந்தி ஆகியோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் பொன்முடி எம்.எல்.ஏ. பேசியதாவது:-
தகுந்த பாடம் புகட்ட...
இன்றைக்கு கியாஸ் சிலிண்டர் விலை ரூ.750 ஆக உயர்ந்துள்ளதால் ஏழை, எளிய மக்கள் எப்படி இதனை வாங்க முடியும். அடுப்பை மட்டும் இலவசமாக கொடுத்து என்ன பிரயோஜனம். 5 ரூபாய், 10 ரூபாய் விலை ஏறினால் ஓரளவு சமாளித்துவிடலாம், நூற்றுக்கணக்கில் சமையல் கியாஸ் விலை ஏறினால் தாய்மார்களால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்.
மத்திய பா.ஜ.க. ஆட்சியின் கெடுபிடி காரணத்தினாலும் அவர்கள் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு துணை போவதாலும் பெட்ரோல்- டீசல் விலையும் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஆளுகிற அ.தி.மு.க. ஆட்சி, மத்திய ஆட்சியை தட்டிக்கேட்காமல் அவர்களுக்கு அடிபணிந்து கிடக்கின்றனர்.
விரைவில் தேர்தல் வர உள்ளதால் ரேஷன் கடைகள் மூலம் ரூ.2,500 தருவதாக அவசரம், அவசரமாக அறிவித்துள்ளனர். அதை பாதி பேருக்கு கொடுத்துவிட்டு மீதி தொகையை தேர்தல் செலவுக்காக கொள்ளையடித்து விடுவார்கள். இன்றைக்கு தாய்மார்கள் ஒன்றுதிரண்டு அ.தி.மு.க. ஆட்சியை அகற்றுவதில் உறுதியாக இருக்கிறார்கள், அதே நேரத்தில் மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக்குவதில் அனைவரும் ஒருமனதாக இருக்கிறார்கள். தாய்மார்கள் ஒன்றிணைந்து மக்கள் விரோத இந்த ஆட்சிக்கு வருகிற சட்டமன்ற தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர்கள் மார்த்தாள், பிரியங்கா, லட்சுமி, சாந்தி மற்றும் ஒன்றிய, நகர மகளிர் அணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.