கொட்டாரத்தில் 730 குடும்பங்களுக்கு இலவச அரிசி தளவாய்சுந்தரம் வழங்கினார்

கொட்டாரத்தில் 730 குடும்பங்களுக்கு இலவச அரிசியை தளவாய்சுந்தரம் வழங்கினார்.

Update: 2020-12-22 01:57 GMT
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பேரூராட்சிக்குட்பட்ட 8 மற்றும் 9-வது வார்டு பகுதியில் வசிக்கும் ஏழை குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேலத்தெரு பிள்ளையார் கோவில் சந்திப்பில் நடந்தது. அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அழகேசன் தலைமை தாங்கினார். மாநில அ.தி.மு.க. இலக்கிய அணி இணை செயலாளர் கவிஞர் சதாசிவம், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் நீலபெருமாள், கொட்டாரம் பேரூர் செயலாளர் சந்திரசேகரன், கொட்டாரம் நகர தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் ராஜேஷ், மாவட்ட வக்கீல் அணி துணை செயலாளர் பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு தனது சொந்த நிதியில் இருந்து 360 குடும்பங்களுக்கு அரிசி பைகளை வழங்கினார். இதுபோல் கீழ்த்தெரு சந்தனமாரி அம்மன் கோவில் வளாகத்தில் 370 குடும்பங்களுக்கு அரிசி பைகள் வழங்கப்பட்டது.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், ஆலங்குளம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி பொருளாளர் சுந்தர்சிங், பேரூர் செயலாளர்கள் குமார், தாமரைதினேஷ், ஒன்றிய அவைத்தலைவர் தம்பித்தங்கம், கொட்டாரம் நகர இளைஞர் பாசறை செயலாளர் அய்யம் பெருமாள், கொட்டாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் காட்வின் ஏசுதாஸ், துணை தலைவர் சுரேஷ், நிர்வாக குழு உறுப்பினர் கார்த்திக்குமார், கொட்டாரம் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் கண்ணன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க நிர்வாகி மணிகண்டன், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் பகவதியப்பன், கொட்டாரம் பேரூர் நிர்வாகிகள் சொர்ணப்பன், சுதன், சிதம்பரம் மகேஷ், தலைமை கழக பேச்சாளர் தாணுலிங்கம், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் குமரகுரு, அறங்காவலர் குழு உறுப்பினர் சதாசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்