தஞ்சையில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விலை உயர்வை கண்டித்து கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து மாதர் சங்கத்தினர் தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கம் சார்பில், வேலை கொடு, உணவு கொடு, வன்முறையற்ற வாழ்வைக் கொடு என வலியுறுத்தி தேசம் தழுவிய ஆர்ப்பாட்டம் தஞ்சை ரெயிலடி அருகே நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, மாதர்சங்க மாநகர செயலாளர் வசந்தி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வி, மாவட்ட தலைவி கலைச்செல்வி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தஞ்சை ஒன்றிய செயலாளர் மாலதி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உதவும் கரங்களை சேர்ந்த் நசீனா பேகம் மற்றும் மாதர்சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ரத்து செய்ய வேண்டும்
ஆர்ப்பாட்டத்தில் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான வேளாண், மின்சார சட்டங்கள் மற்றும் பெண்கள் விரோத சட்டங்களை திரும்ப பெற வேண்டும். ரேஷன் கடைகளை மூடக்கூடாது. அத்தியாவசியப் பொருட்களை ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாக வழங்கவேண்டும். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு நிபந்தனையின்றி கடன் கொடுக்க வேண்டும்.
நுண் நிதி நிறுவன கடன்களை ரத்து செய்ய வேண்டும். குடி மனைப்பட்டா இல்லாதவர்களுக்கு குடி மனைப்பட்டா வழங்க வேண்டும். அரசு வழங்கும் நிவாரணங்களை முறையாக வழங்க வேண்டும். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும்’’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கியாஸ் சிலிண்டருக்கு மாலை
ஆர்ப்பாட்டத்தில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், விறகு அடுப்பை சாலையில் வைத்து, அடுப்பில் தீ மூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.