36 மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேசுவரத்தில் 5-வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்தம்
36 மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேசுவரத்தில் 5-வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் மற்றும் தூத்துக்குடியில் இருந்து கடந்த வாரம் மீன் பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற் படையால் 5 படகு மற்றும் 36 மீனவர்கள் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த 36 மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த 16-ந் தேதி முதல் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்களின் வேலை நிறுத்தமானது நேற்றுடன் 5-வது நாளை எட்டியுள்ளதுடன் சுமார் 700-க்கும் அதிகமான விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் துறைமுக கடல் பகுதியில் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மீனவர்களின் வேலை நிறுத்தத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டு ஏராளமான மீனவ குடும்பங்கள் பசி பட்டினியுடன் தவித்து வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையல் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள ராமேசுவரம் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த 36 மீனவர்களையும் விடுதலைசெய்ய வலியுறுத்தியும், ஏற்கனவே இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்டு கடலில் மூழ்கி சேதமடைந்த 150 படகுகளுக்கும் அரசு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் இன்று (திங்கட்கிழமை) காலை ராமேசுவரம் பஸ்நிலையம் எதிரில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.