வேதாரண்யம் அருகே அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய ஆண் பிணம் போலீசார் விசாரணை

வேதாரண்யம் அருகே அழுகிய நிலையில் ஆண்பிணம் கரை ஒதுங்கியது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Update: 2020-12-21 01:06 GMT
வேதாரண்யம்,

வேதாரண்யத்தை அடுத்த மணியன் தீவு கடற்கரையில் ேநற்று மதியம் அழுகிய நிலையில் ஒரு ஆண் பிணம் கரை ஒதுங்கி கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்த கடலோர காவல் குழுமம் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசகேரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனா்.

உடல் அழுகிய நிைலயில் இருந்ததால் சம்பவ இடத்துக்கு டாக்டர்களை வரவழைத்து அங்கேேய பிேரத பாிேசாதனை ெசய்யப்பட்டது. பின்னா் கடற்கரையில் உடல் புதைக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு ெசய்து

கடற்கரையில் பிணமாக கிடந்தவா், மீன் பிடிக்கச் சென்ற போது தவறி கடலில் விழுந்து இறந்தாரா? அல்லது கடத்தலில் ஈடுபட்ட நபா் யாராவது தவறி கடலில் விழுந்து இறந்தாரா? என பல்ேவறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்